ரஸ்ய வான்பரப்பில் வெடிப்பு; 400 பேர் காயம்! (காணொளி, படங்கள் இணைப்பு)
ரஸ்யாவின் யூரல் மலைத்தொடரில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் பகுதி வான்பரப்பில் விண்கல் வெடித்துச் சிதறியதில் சுமார் 400 பேர் வரை காயமடைந்துள்ளதுடன் இந்த வெடிப்பு சம்பவத்தின் போது நிலநடுக்கம் ஏற்பட்டதைப்போல் மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டதாக ரஸ்யா தொலைக்காட்சி தனது செய்தியில் தெரிவித்தது.
எரி நட்சத்திரத்திரம் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாகவும் இந்த வெடிப்பு நடைபெற்றபோது சில வீடுகளின் கூரைகள் நொறுங்கியதுடன் பல வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறியுள்ளதுடன் இந்த பகுதியில் தொலைத் தொடர்பு சேவைகளும் தடைப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment