தினந்தோறும் 3150 சாரதி அடையாள அட்டைகள்
போக்குவரத்துத் திணைக்களம் ஒரு நாளைக்கு 3150 சாரதி அடையாள அட்டைகளை வழங்கி வருவதாக குறிப்பிடும் போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்கா சென்ற வருடத்திற்குள் மாத்திரம் 618053 சாரதி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
சென்ற வருடம் 347959 புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், புதிதுபடுத்தப்பட்ட 231465 அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன எனக் குறிப்பிடுகிறார்.
எதுஎவ்வாறாயினும், சாரதி அடையாள அட்டை வழங்குவதில் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படும் குளறுபடிகள் பற்றியும், சாரதிகளைப் பயிற்றுவிக்கும் பாடசாலைகளினால் ஏற்படும் குளறுபடிகள் பற்றியும் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
1 comments :
These type irregularities indicates indirectly "The authorized killing machines are allowed on the streets".
Poor pedestrians.Worst than an epidemic.Epidemic of crimes.
Post a Comment