யாழ்.வைத்தியசாலையின் புதிய 3 மாடிக் கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு! (படங்கள் இணைப்பு)
ஜப்பான் அரசாங்கத்தின் 2,555 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் ஜெய்க்கா நிறுவனத்தால் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டடத்தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(13.02.2013) புதன்கிழமை திறந்துவைத்துள்ளார்.
நிர்மானிக்கப்பட்டுள்ள நவீன கட்டிடத்தொகுதியிலுள்ள 10 சத்திரசிகிச்சைக் கூடங்களையும் கண்காணிப்பு கட்டில்கள், புற்றுநோயை இனங்காணக் கூடிய கருவிகள் ஆகியவற்றையும் ஜனாதிபதி பார்வையிட்டதுடன் அவற்றின் தொழில்காடுகள் குறித்தும் அறிந்து கொண்டார்.
இந்த புதிய வைத்தியசாலை இலங்கையில் உள்ள ஏனைய வைத்திய சாலைகளை விட நவீனதொழில் நுட்பம் உடையதாக காணப்படுவதாக குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment