முத்தத்தில் சாதனை, 3ஆயிரத்து 300 அமெ.டொலர்களும் இரு வைர மோதிரங்களை வென்ற ஜோடி
உலகில் பல்வேறு சாதனைகள் நிலைநாட்டப்பட்டாலும் புதிது புதிதாக சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் முத்தத்தில் சாதனை படைத்துள்ளனர் தாய்லாந்து தம்பதியினர். இவர்கள் 58 மணி, 35 நிமிடங்கள் 58 செக்கன்கள் தொடர்ந்தும் முத்தமிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
தாய்லாந்தைச் சேர்ந்த மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தரான எக்சாய் திரனாரத்தும் (44) அவரது மனைவி லக்ஷனாவும் (33) இணைந்தே புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த வருடம் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை 8 மணித்தியாலங்களால் முறியடித்துள்ளனர்.
காதலர் தினத்தையொட்டி இடம்பெற்ற முத்தமிடும் போட்டியிலேயே சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் இந்த ஜோடி முத்தமிட்டு சாதனை படைத்துள்ளது.
இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் தொடர்ச்சியாக நின்றவாறு உணவு மற்றும் பானங்களை இறப்பர் குழாய் மூலம் உள்ளெடுத்தவாறு முத்தம் கொடுக்கக் வேண்டும்மலசலகூடத்துக்குச் செல்வதானால் கூட உதட்டோடு உதடு முத்தமிட்டவாறே செல்வது அவசியமாகும்.
இவ்வாறான கடினமான போட்டியில் இந்த ஜோடி வெற்றிபெற்ற 3ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்களும் இரு வைர மோதிரங்களையும் வெற்றுள்ளனர்.
.
0 comments :
Post a Comment