Sunday, February 24, 2013

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வாங்குவதற்கு $2.5 மில்லியன் டாலர் செலவழித்தது எகிப்து அரசு!!

நாட்டில் புதிய ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகளை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கில், எகிப்து அரசு இதுவரை கண்ணீர் புகை குண்டுவீச்சுக்கு மாத்திரம் 2.5 மில்லியன் டாலர் செலவழித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.எகிப்தின் உள்துறை அமைச்சு, மிக அவசரமாக இன்னும் ஒரு வருடத்துக்குத் தேவை என 140 000 canisters கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வாங்குவதற்காக இவ்வளவு பெரும் தொகையை செலவழித்திருக்கிறது.

எகிப்தில் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் மிகக் குறைவடைந்துள்ள நிலையிலும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் உதவியும் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் பணத்தைத் தேவையில்லாது இப்படி ஒரு அற்ப விடயத்துக்கு எகிப்து அரசு இறைத்துள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

2011 இல் ஹோஸ்னி முபாரக் ஆட்சியின் போது இடம்பெற்ற வன்முறைகளை தடுப்பதற்காக எகிப்து இராணுவம் கடும் பிரேயர்த்தனம் செய்தது. தற்போது பதவியில் இருக்கும் மோர்சியும் இதே யுத்தியைத்தான் சற்று புதுப்பிக்கப் பட்ட விதத்தில் மக்களை அடக்குவதற்குக் கையாளுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சமீபத்தில் கிப்தின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை அடக்கப் போலிசாரால் உபயோகிக்கப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு அபாய கட்டத்தைத் தாண்டிச் சென்றுள்ளதாக மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com