மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு சுற்றிக்கையை வெளியிடு-24 மணி நேர போராட்டம்
மேலதிக நேரக் கொடுப்பனவு அதிகரிப்பிற்கான சுற்றிக்கையை வெளியிடக் கோரி, நிறைவு காண் மருத்துவவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒன்றியத்தினால் நாடாளவிய ரீதியில் நேற்று முதல் 24 மணி நேர அடையாள சுகயீன விடுமுறைப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையான 24 மணித்தியாலய காலப்பகுதியில் இவர்கள் மேற்கொண்ட இப்போராட்டத்தினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நிறைவு காண் மருத்துவவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒன்றியத்தின் கீழ் உள்ள மருந்தாளர்கள், எக்ஸ் கதிர் இயக்கவியலாளர்கள், இயன்மருந்தாளர்கள், மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியேரே இவ்வாறு நேற்றுக் காலை முதல் 24 மணி நேர அடையாள சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment