மியன்மார் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு 22ஆம் திகதிவரை விளக்கமறியல்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முற்பட்ட வேளையில் அண்மையில் இலங்கை கடற்பரப்பில் நிர்க்கதியான மியன்மார் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
138 வெளிநாட்டுப் பிரஜைகள் அக்கறைப்பற்று கடற்பரப்பில், கடற்படையினரால் வெளிநாட்டுப் பிரஜைகள் மீட்கப்பட்டனர்.
இவர்கள் தொடர்பான வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்பின்னர் மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பிரஜைகளை தடுத்து வைக்கும் முகாமிற்கு குறித்த வெளிநாட்டுப் பிரஜைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment