என்ன நடக்குமோ இலங்கைக்கு? ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக 209 குற்றச் சாட்டுப் பத்திரம் !
இம்முறை ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சம்மேளனத்தில் இலங்கை சார்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள 209 கோரிக்கைகள் அடங்கிய விமர்சன அறிக்கையிலுள்ள 98 விடயங்களை நிராகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இந்த 98 கோரிக்கைகளிலும் இலங்கைக்கெதிரான கருத்துக்களே அடங்கியுள்ளன.
இதில் இலங்கை அரசாங்கம் போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தை சர்வதேச நீதிமன்றில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள இணங்குவது போலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அரசாங்கம் அவற்றில் 111 விடயங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் சம்மேளனத்தில் ஒன்றுகூடவுள்ள 24 நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் கூட்டுச் சேரும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்சம்மேளனத்தில் இலங்கைக்கு எதிராகவுள்ள பாரிய குற்றச்சாட்டு கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக் கொள்ளாமையே.
என்றாலும் அந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் 1200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் சம்மேளத்திற்கு தெளிவுறுத்தவுள்ளது.
இம்முறை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவுள்ள அமெரிக்காவின் புதிய திட்டத்தை எதிர்த்துள்ள இலங்கை, இஸ்ரவேலுடன் கூட்டுச் சேரும் திட்டத்தையும், இலங்கை சார்ந்த வேறு திட்டத்தையும் பின்பற்றவேண்டாம் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரிடம் கேட்டுள்ளது.
இதேநேரம், மற்றுமொரு மனித உரிமைகள் ஆய்வுக் குழுவொன்றை இந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவி பிள்ளை விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment