Friday, February 15, 2013

யாழ் இசைவிழா 2013 இவ்வருடம் யாழப்பாணத்தில்

யாழ் இசைவிழா 2013 இவ்வருடம் யாழப்பாணத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் 2 ஆம் திகதிகளில் சுப்பிரமணியம் பூங்காவிற்கு எதிரே உள்ள யாழ்.மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.ரோயல் நோர்வே தூதரகம்; மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பு ஆகியன யாழ் இசைவிழா நிகழ்விற்கு நிதியுதவி அளிப்பதுடன், அருஸ்ரீ கலையகத்தின் ஆலோசனையுடன் சேவாலங்கா மன்றம் இவ்விழாவை ஒழுங்கமைக்கவுள்ளது.

இந்நிகழ்வில் உள்ளுர் கலைஞர்களின் நிகழ்வுகளுடன் சர்வதேசகலைஞர்களின் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சியின் போது காலையில் நிகழ்வுகள் யாவும் பிரேத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மேடைகளில் பாரம்பரிய, சாஸ்திரிய மற்றும் சமகால இசைநிகழ்வுகளாக நடைபெறும்.

உள்நாட்டுமற்றும் சர்வதேசகலைஞர்களின் இசைநிகழ்ச்சிகள் இரண்டு நாட்களும்; காலை 9.00 முதல் நண்பகல் 12.00 மணிவரையும் அவர்களிற்கென ஒதுக்கப்பட்டபிரத்தியேக கூடாரங்களில் நடைபெறும்.


இத் திறமைவாய்ந்தஅனுபவம் மிக்ககலைஞர்களால் பிரதானமேடையில்நிகழ்வுகள் பி.ப 5.00 மணி தொடக்கம் பி.பூ.30 மணி வரையும் நடைபெறும்.

கலைஞர்களின் பிரதானமேடைநிகழ்வுகள் பாரம்பரிய இசைநிகழ்வுகளாக மறைகாத்தமாவீரர் (கத்தோலிக்க கூத்து பாசையூர்- யாழ்ப்பாணம்), பக்கீர்பைத் (அம்பாறை), பப்பரவாகன் கூத்து (சுழிபுரம், யாழ்ப்பாணம்), பறைமேளக் கூத்து (முள்ளியவளை, முல்லைத்தீவு), மட்டக்களப்புநகரின் பாரம்பரியபாடல்கள் (மட்டக்களப்பு), சன்னியகும (பென்தர,பாணந்துறை), வேளம்பு எடுத்த வீராங்கனை (முள்ளியவளை, முல்லைத்தீவு) ஆகியன நடைபெறும்.

சாஸ்திரிய இசைநிகழ்வுகளாக கொழுப்புபிறாஸ் இசைக் குழு (இலங்கையின் முதற்தரபிறாஸ் வாத்தியக் குழு), நாதரஞ்சனி (கர்நாடகசங்கீதக் குழு), கீழைத்தேசவாத்தியஇசைக் குழு , பூலான் தேவி இசைநாடகம் (காயத்ரிகேமதாச இசைநாடகத் திட்டம்), சங்கீதசங்கமம் (அனுபவிமிக்க ஹிந்துஸ்தானிமற்றும் கர்நாடக இசைக் கலைஞர்கள் சந்திப்பு), மங்கல இசை (தவில் இ நாதஸ்வரம்) ஆகியன நடைபெறும்.

சமகால இசைநிகழ்வகள்hக நாட்றோ, ரன்வலப்றிகேட் , ரவிபந்துவித்யாபதிமேளவாத்தியக் குழு , சப்தமி, இசைகளின் தொகுப்பு என்பன நடைபெறும் .

அதேபோல் சர்வதேசக் குழுக்களாக பங்களாதேஸ், பிரேஸில், இந்தியா, நோர்வே, பலஸ்தீன் ஆகிய நாடுகளிலிருந்து கலைஞர்கள் வருகைதரவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com