20 இலட்சத்தை எட்டிய கட்டாக்காலிகள்
இலங்கையில் சுமார் 20 இலட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் 60 வீதமானவை கட்டாக்காலி நாய்களாக இருக்கின்றன. இதனால் அதிகளவில் நீர்வெறுப்பு நோய் (விசர்) ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் விசர் நாய்க்கடியினால் ஏற்படும் நீர் வெறுப்பு நோயினால் 40 முதல் 50 பேர் வரை உயிரிழக்கின்றனர். இவர்களும் மிகவும் மோசமான பின்விளைவுகளைச் சந்தித்த பின்பே மரணமாக வேண்டிய நிலை உருவாகின்றது.
இலங்கையில் வாழ்பவர்களில் எட்டுப் பேரில் ஒருவருக்கு ஒரு நாய் வீதம் உள்ளது என கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என நீர்வெறுப்பு நோய்த்தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார். ஒரு வருடத்திற்கு 12 இலட்சம் நீர்வெறுப்பு தடுப்பூசிகள் நாய்களுக்காக பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசிகளை நாய்களுக்கு கொடுக்க வேண்டும்.
நீர்வெறுப்பு நோய் மிக விரைவில் உடல் முழுவதும் பரவக் கூடியதென்பதால் நாய்க்கடிக்குள்ளான ஓரிரு நிமிடங்களிலேயே சிகிச்சை பெறவேண்டும் என்றும் டாக்டர் ஹரிச்சந்திர தெரிவித்தார். இந்த நோய் உடலில் பரவும் போது நரம்பு மண்டலத்தைப் பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். துடித்தல், எச்சில் வடிதல் போன்றன நோயின் அறிகுறிகளாகும்.
நோயாளியின் அருகில் இருப்பவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் டாக்டர் ஹரிச்சந்திர குறிப்பிட்டார்.
2 comments :
Why not you soften your hearts.There are hundreds of shelter homes in every europe country for orphan animals like dogs cats and other pets.Kind hearted people with the help of the government can organize shelters for orphan pets which is a greater service we do on
behalf of our almighty God.It is really sorrowful to hear the wordings "stray (Kattakali) animals".
Animal lovers please do care about the poor animals.Love is God.
Post a Comment