க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 16 ஆயிரத்து 538 பரீட்சார்த்திகள் 3 பாடங்களிலும் டக்...!
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தரப்பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 16 ஆயிரத்து 538 பரீட்சார்த்திகள் தாம் எழுதிய மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லையென்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை தாம் தோற்றிய மூன்று பாடங்களிலும் 8 ஆயிரத்து 544 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளனர்.
மூன்று பாடங்களிலும் சித்தியடைந்தவர்களில் அதிகமானவர்கள் வர்த்தகப் பாடங்களிலேயே அதிகமாக 6 ஆயிரத்து 471 பேர் சித்தியடைந்துள்ளனர்.
கலைப்பிரிவில் ஆயிரத்து 313 பேர், கணிதப் பிரிவில் 443 பேர் விஞ்ஞானப் பிரிவில் 313 பேர் பொதுப்பாடப் பிரிவில் 4 பேரும் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.
0 comments :
Post a Comment