15 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு நேற்று முதல் இடமாற்றம்
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு , அமைச்சரவை பாதுகாப்பு பிரிவுகளிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 15 பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றங்கள் வழங்க்பபட்டுள்ளன. இவை அனைத்தும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது..
யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.ஈ.ஐ.பெரேரா தனிநபர் மற்றும் பதிவு பிரிவு,
திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜயதுங்க குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பிரிவு,
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.எச்.ஜயவீர நலன்புரி பிரிவு,
கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்.டி. தலுவத்த காலி மாவட்டம்,
ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.யூமாநனாயக்க ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு,
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர்.வைத்தியலங்கார பொலிஸ் தலைமையகம்,
கொழும்பு மத்தி பிரதி பொலிஸ் மா அதிபர் பி.எம்.பெரேரா ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டம்,
சொத்து முகாமைத்துவ பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ.கருணாரட்ன யாழ். மாவட்டம்,
காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆர்.பத்மசிறி அநுராதபுரம் - பொலநறுவை மாவட்டங்கள்,
போக்குரவத்து பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் கே.எஸ்.ஜயசேகர கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்கள்,
கண்டி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டி.பி. கணேகம புத்தம் மாவட்டம்,
நுகேகொட பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் மொனராகல மாவட்டம்,
ஐ.என்.ஆர் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் வீ.இந்திரன் மட்டக்களப்பு மாவட்டம்
களனி பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் பெரேரா திருகோணமலை மாவட்டம் ஆகிய இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இடமாற்றங்கள் யாவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவின் அங்கீகாரத்துடன் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment