அபிவிருத்தி பணிகளின் இராணுவம். 1500 மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளதாம்.
நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்தியதன் மூலம் 2012 இல் அரசுக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா மீதமாகியுள்ளது. இராணுவத்தின் மனித வளம் அரசின் பல்வேறு அபிவிருத்தி திட்டப்பணிகளுக்கு தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருவதன் ஊடாக இவ்வாறான ஒரு பெருந்தொகை பணத்தை அரசுக்கு மீதப்படுத்த முடிந்துள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் நகர அபிவிருத்தி அலங்காரம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு இராணுவத்தினர் இவ்வாறு மனித வளத்தையும் உழைப்பையும் வழங்கி பங்களிப்புச் செய்துள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்றுத் தெரிவித்தார்.சார்க் கலாசார நிலையத்தின் நிர்மாண திட்டத்திற்காக 907 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த வேலைத்திட்ட த்துக்கு இராணுவத்தினர் பெற்றுக்கொடுத்த மனித வளத்தின் பெறுமதி 110 மில்லியன் ரூபாவாகும்.மருத்துவபீட கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கு 1477 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதுடன் இராணுவத்தினர் 492 ரூபா பெறுமதியான உழைப்பை பெற்றுத் தந்துள்ளனர்.
கோல்ட் சென்டர் வர்த்தக கட்டடத் தொகுதியை அமைக்க 304 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதுடன் இராணுவத்தினர் மனித வளம் மூலம் பங்களிப்பு செய்ததன் மூலம் 101 மில்லியன் ரூபா மீதமானது.இவ்வாறாக கடந்தாண்டு 20க்கும் மேற்பட்ட மிக முக்கியமான நிர்மாண திட்டப் பணிகளுக்கு இராணுவத்தினரின் சேவை பெறப்பட்டதாக அந்த இராணுவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment