மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை, 13 பெண்கள் கைது
கொழும்பு மருதானை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபச்சார விடுதியென்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதோடு, அவ்விடுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 13 பெண்கள் மற்றும் விடுதி முகாமையாளர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானை பொலிஸ் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குட்பட்ட பிரபல பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் இவ்விடுதி செயற்பட்டு வந்துள்ளது.
தீடீர் குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரீ. கணேசநாதன் தலைமையிலான குழுவினரே இந்நடவடிக்கையை மேறகொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் அநுராதபுரம் மற்றும் பொலநறுவை பகுதிளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 22, 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment