12 ஆம் திகதி யாழ்.வருகிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
யாழ் வரும் ஜனாதிபதி யாழ்.போதனா வைத்திய சாலையின் ஐந்து மாடி புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளதுடன் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு 24 மணி நேரமின் விநியோகத்தை மேற்கொள்ளவென அமைக்கப்பட்டுள்ள புதிய செயல்த்திட்ட நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
இறுதியாக வடமாகாணத்தில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment