இலங்கையின் நடுக்கடலில் உணவின்றி தத்தளித்த 115 பேர் கடற்படையால் காப்பாற்றப்பட்டுள்ளனர்(படங்கள் இணைப்பு)
அம்பாறை, ஒலுவில் கடல் பிரதேசத்தில் நேற்று தத்தளித்துக்கொண்டிருந்த பங்களதேஷ், மியான்மார் நாடுகளைச்சேர்ந்த 115 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ள போதும் இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் பங்களதேஷில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுகொண்டிருந்த பங்களதேஷைச் சேர்ந்த 104 பேரும் மியான்மாரைச் சேர்ந்த 11 பேர் அடங்கிய குழுவினர், ஒலுவில் கடலில் 70 மைல்களுக்கப்பால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையால் காப்பற்றப்பட்ட போது உணவின்றி ஒருவர் இறந்திருந்ததுடன் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்ட 2 பெண்கள் உட்பட 6 பேரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் இவர்களிடம் கடற்படையினர் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் நான்கு நாட்களாக உணவுகள் இன்றி நடுக்கடலில் இருந்திருப்பதாக தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment