தெற்கு சூடானில் தீவிரவாதிகள் அட்டகாசம் 100 இற்கும் அதிகமான பழங்குடியினத்தவர்கள் பலி.!
தெற்கு சூடானில் பழங்குடியின மக்கள் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.சூடான் நாட்டில் இருந்து எண்ணெய் வளம் நிறைந்த தெற்கு சூடான் பகுதி கடந்த 2011-ம் ஆண்டு தனி நாடாக பிரிந்தது. 1983-2005 வரை ஆயுதம் ஏந்திய இனவாதிகளால் சூரையாடப்பட்ட அந்த பகுதிகளை கட்டுப்படுத்த தெற்கு சூடான் அரசு திணறி வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் நிலவும் பஞ்சத்தை தவிர்க்க பழங்குடியின மக்கள் தங்கள் கால்நடையுடன் பயணம் மேற்கொண்டனர். அவர்களின் பாதுகாப்பிற்கு 14 ராணுவத்தினரும் உடன் சென்றனர்.
அப்போது ”யாவ் யாவ்” இயக்க தீவிரவாதிகள், மற்றொரு பழங்குடியினருடன் சேர்ந்துகொண்டு கால்நடையுடன் பயணம் மேற்கொண்ட பழங்குடியினர் மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் பெண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பிற்கு சென்ற 14 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
தெற்கு சூடானின் சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை அங்கு 1500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது. இப்பகுதி தீவிரவாதிகளுக்கு சூடான் அரசு ஆயுதங்கள் கொடுத்து உதவுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
0 comments :
Post a Comment