சவுதி அரேபியாவில் சூனியம் செய்த இலங்கையருக்கு 100 கசையடி
சவுதி அரேபியாவில் தனது நண்பருடன் இணைந்து சூனியம் செய்த குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வீட்டு சாரதியாக பணிபுரிந்த இலங்கை பதியத்தலாவையை சேர்ந்த பிரேமநாத் பெரேராலாகே துங்கசிறி என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு 100 கசையடிகள் மற்றும் ஒருவருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் சூனியம் செய்யது மட்டுமல்லாது இனந்தெரியாத ஒரு பெண்ணோடு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்த நிலையில் இவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பதியத்தலாவவை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாவா பிரேமநாத் பெரேராலாகே துங்கசிறி ஹம்முல் ஹம்மாம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்காலமும் தண்டனையும் நிறைவடைந்தவுடம் உடனடியாகவே இவர் நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
3 comments :
இலங்கை உட்பட உலக நாடுகளில் காட்டுமிராண்டி அரேபியர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அதாவது காட்டுமிராண்டி பாணியில் உடை, நடை மட்டுமல்ல அரேபியில் ஓதல்களையும் தடைசெய்ய வேண்டும். எவனாவது சட்டத்தை மீறினால் கடுமையான கசையடி, சிறை தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
I accept also this.
ARABIDDA VAANGI THINDKKONDU AVARKALAI PATRI KURAI VERU ULAIKKA PORA IDATTHIL OOR PUTTHIYAI EAN KAADDA VENDUM PONAMA VANTHOMA ENRU IRUKKA VENDIYATHUTHAANE.
Post a Comment