பொலிஸ் சீருடையணிந்து கொழும்பில் தமிழ் வர்த்தகரிடம் 1 கோடி கொள்ளை! இரு மணித்தியாலயங்கள் டிபன்டரில் வர்த்தகருடன் சுற்றிய கொள்ளையர்கள்!
வெள்ளவத்தை கொட்டாஞ்சேனை பகுதிகளில் நாணயமாற்று நிலையங்களை நடாத்தி வருகின்ற பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் இன்று நண்பகல் 1 கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் கொழும்பு சம்பத் வங்கி தலைமைக்காரியாலயத்தில் வெளிநாட்டு நாணயங்களை கொடுத்து இலங்கை நாணயம் 1 கோடி ரூபாவினை பெற்றுக்செல்லும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வர்த்தகர் தனது சாரதியுடன் கொழும்பு கங்காராம பிரதேசத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது , போக்குவரத்து பொலிஸாருக்கான சீருடையில் நின்ற ஒருவர் வாகனத்தை மறித்து சாரதியின் பத்திரங்களை சோதித்துக்கொண்டிருந்தபோது பின் பக்கத்தால் வந்த நால்வர் தம்மை சீஐடியினர் என அறிமுகம் செய்து வாகனத்திலிருந்த வர்த்தகரை பலவந்தமாக இழுத்துச் சென்று டிபன்டர் வண்டியில் ஏற்றியுள்ளனர். பின்னர் அதே டிபன்டரில் சாரதியையும் ஏற்றிய அவர்கள் வர்த்தகரின் வாகனத்தையும் எடுத்துக்கொண்டு கொழும்பு நகரினுள் சுமார் இரு மணித்தியாலயங்கள் சுற்றி திரிந்து விட்டு வர்த்தகரையும் சாரதியையும் கொழும்பு கோட்டே பிரதேசத்தில் விட்டு விட்டு மர்மமாகியுள்ளனர்.
வர்த்தகரின் வாகனம் கொழும்பிலுள்ள கார் தரிப்பிடம் ஒன்றில் விடப்பட்டுள்ளது.
கொள்ளையர்களின் பிடியிலிருந்து விடுபட்ட வர்த்தகர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை ஆரம்பமான விசாரணைகளில் குறித்த டிபன்டல் கொழும்பு நகரில் சுற்றித்திருந்தமை பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது என விசாரணை அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இக்கு தெரிவித்தார்.
மேலதிக விபரங்கள் தொடரும்....
0 comments :
Post a Comment