(கலைமகன் பைரூஸ்) வடக்கில் இன்னும் எல்ரீரீஈ உறுப்பினர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அரசாங்கம் பொய் சொல்கிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடுகிறது. மீண்டும் நாட்டில் இனவாத சிந்தனையைக் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திர குறிப்பிடுகிறார்.
அரசாங்கம் சொல்கின்ற இவ்வாறான கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிடுகின்ற அவர், தற்போது அரசாங்கத்தில் கைதிகளாக இருக்கின்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருபோதும் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
அரசின் ஒரே இலக்கு என்னவென்றால், ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டுவருகின்றார்கள் என்பதை சிங்கள மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment