அவுஸ்ரேலியாவைப் பழி தீர்த்தது இலங்கை முதலாவது T-20யில் வெற்றி
அவுஸ்ரேலியாவுடனான முதலாவது இருபதிற்கு 20 போட்டில் இலங்கை அணி அபாராகமாக அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்து டெஸ்ட் தொடரை அவுஸ்ரேலியா 3-0 என கைப்பற்றியது. ஒரு நாள் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது.
இந்த நிலையில் இரண்டு 20ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற அவுஸ்ரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வார்னம் மற்றும் பின்ஞ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். பின்ஞ் 1 ரன் எடுத்த நிலையில் குலசேகரா பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ஷேன் மார்ஷ் 6 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வார்னருடன் கேப்டன் பெல்லி ஜோடி சேர்ந்தார். 11 ரன்கள் எடுத்த நிலையில் பெய்லி பெரேரா பந்தில் ஆட்டம் இழந்தார்.
ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வார்னர் அதிரடியாக விளையாடினார். 4-வது விக்கெட்டுக்கு வார்னருடன் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் கடைசி வரை அவுட் ஆகாமல் விளையாடினர்.
வார்னர் 62 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 90 ரன்களும், வோக்ஸ் 29 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதனால் அவுஸ்ரேலியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.
அடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீரர்கள் தில்ஷன், குஷல் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். தில்ஷன் 16 ரன்களிலும், குஷல் பெரேரா 33 ரன்களிலும் அவுட் ஆகினர்.
அதன்பின் வந்த ஜெயவர்த்தனே 8, சந்திமல் 5 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். என்றாலும் மாத்யூஸ், திசாரா பெரேரா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் இலங்கை அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரா வெற்றி பெற்றது.
இரண்டாவது மற்றும் கடைசி போட்டி 28-ந்தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
0 comments :
Post a Comment