சிறிதரன் MP க்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்! EPDP என கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு!
கிளிநொச்சி மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனக்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறையிட்டுள்ளார். தனது முறைப்பாட்டில் மிரட்டல் காரன் தன்னை ஈபிடிபி யின் ஆயுதங்களை கொண்டு உன்னை கொலை செய்யப்போகின்றேன் எனக்கூறியதாகவும் தெரிவித்துள்ளதுடன் குறித்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
புhராளுமன்ற உறுப்பினரின் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்த பொலிஸார் தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை இனம்கண்டு கொண்டதுடன் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். பொலிஸாரின் அழைப்பாணையை ஏற்ற குறித்த நபர் கிளிநொச்சி வர்த்தகர் சங்கத்தலைவர் ரட்ணமணியுடன் நேற்று பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி வர்த்தக சங்கத்தலைவர் ரட்ணமணி இலங்கைநெற் க்கு கூறுகையில்
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து வந்திருந்து அழைப்பொன்றை அடுத்து கிளிநொச்சி வர்த்தகரான தணிகதாசன் வர்த்தகர் சங்கத்தலைவர் என்ற முறையில் தன்னுடன் பொலிசுக்கு செல்லவருமாறு அழைத்தார். நான் தணிகதாசனுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தேன் அங்கு தணிகதாசன் தான் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியமையை ஏற்றுக்கொண்டார். ஆனால் தான் கொலை மிரட்டல் ஏதும் விடுக்கவில்லை எனவும், தனது சகோதரனின் மரணத்திற்கு சிறிதரனே எம்பி யே காரணம் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படையாக பாரளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியதாகவும் பொலிஸாரிடம் கூறினார்.
உங்கள் சகோதரனின் மரணத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு காரணமாக அமைய முடியும் என பொலிஸார் கேட்டபோது, தனது சகோதரன் அம்பாள்புரம் கடைத்தொகுதியில் தொலைபேசி கடை ஒன்றினை வைத்திருந்தாகவும் புதிதாக அமைக்கப்படவுள்ள கடைத்தொகுதியில் தனது சகோதரனுக்கு கடை ஒன்று மறுக்கப்பட்டமையினால் அவர் மனமுடைந்து நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பினால் மரணித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்படுகின்றது. இங்கு எனது சகோதரன் பன்னெடுங்காலங்களாக வியாபாரம் செய்து வந்தார். இங்கு வியாபாரம் செய்து வருகின்ற பலரை புறம்தள்ளி பாராளுமன்ற உறுப்பினர் இப்பிரதேசத்தை சேராத பிற பிரதேசங்களை சேர்ந்த சுமார் 10 பேருக்கு கடைகளை ஒதுக்கியுள்ளார். இதுவே எனது சகோதரனின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்த அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன்னுடைய வியாபார நிலையத்திற்கு முன்னால் சிறிதரன் எம்பி யே எனது சகோதரனின் மரணத்திற்கு காரணம் என சுவரொட்டி ஒன்றை பகிரங்கமாக ஒட்டியிருந்ததையும் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டார்.
ஈபிடிபி யின் ஆயுதங்களை கொண்டு கொல்லப்போவதாக மிரட்டியதாக பாராளுமன்ற உறுப்பினரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவப்பட்டபோது, தனது இரு சதோதரர்கள் புலிகளியக்கத்திலிருந்து மரணித்துள்ளதுடன் தாம் புலிகளின் மாவீரர் குடும்பத்தை சேர்த்தவர்கள் என்றும் நேற்றுவரை தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனுதாபிகள் என்று பொலிஸாருக்கு நேரடியாகவே தெரிவித்ததுடன் வன்னியில் பிறந்தது முதல் இன்றுவரை (இடைத்தங்கல் முகாம் வாழ்வு ஒன்றரை வருடத்தை தவிர) வன்னியிலேயே வாழ்ந்து வருவதாகவும் ஈபிடிபி என்கின்ற அமைப்பினரை தனக்கு தெரியது என்றும் அவ்வமைப்புடன் எந்த தொடர்பும் கிடையாது என்றும் கூறினார் என்றார்.
மறுபுறத்தில் சிறிதரனின் காடையர் கும்பலால் தணிகதாசனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவத்திற்கு மன்னிப்பு கோராவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
தணிகதாஸனால் தனது கடையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
1 comments :
சவபெட்டி (Lankasri ) MPயின் அட்டகாசத்திக்கு விரைவில் முடிவு கட்டியாகியாக வேண்டும்.
Post a Comment