புதிதாக தமிழ்ப் பதங்கள் சேர்ப்பது பற்றியல்ல நான் சொன்னேன். இருமொழிகளிலுமுள்ள தேசிய கீதத்தை ஒன்றிணைத்துப் பாlடுங்கள் என் றே சொன் னேன் - வாசு
தேசிய கீதத்துக்கு தமிழ்ப் பதங்கள் புதிதாக இணைப்பது பற்றியல்ல தான் நான் சொன்னேன். என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.
தான் இந்த பிரேணையைக் கொண்டுவந்ததது எதற்காகவென்றால் சமூக ஒருமைப்பாட்டையும் தேசிய ஒற்றுமையையும் கருத்திற்கொண்டே என்று அமைச்சர் தெளிவுறுத்துகிறார்.
‘நாங்கள் புதிதாகத் தமிழ்ப் பதங்கள் சேர்ப்பது பற்றிச் சொல்லவில்லை. தேசிய கீதம் இலங்கையில் இரு மொழிகளிலும் வெவ்வேறாக உள்ளன. அவை இரண்டையும் ஒன்றிணைத்துப் பாடுமாறே சொன்னோம். ஒரே கீதமாக.... ஒரே இனமாக.... இதலுள்ள சட்டப் பிரச்சனை பற்றி இன்னும் நான் பார்க்கவில்லை. நான் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனை சமூக ஒருமைப்பாடு பற்றியே சிந்தித்தேன். சட்டப் பிரச்சனை பற்றி பார்த்து பொருத்தமான முறையில் செயற்படுத்துவதான் சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment