இந்திய இராணுவ வீரரின் தலை துண்டிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானின் ISI தொடர்பு!!
காஷ்மீர் எல்லையில் இந்திய இராணுவ வீரர் ஹேம்ராஜ் சிங்கின் தலையை துண்டித்த பாகிஸ்தான் தீவிரவாதிக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ புலனாய்வு அமைப்பு ரூ.5 இலட்சம் பணப்பரிசு கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்திய-பாகிஸ்தான எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு அதில் ஹேமராஜ் சிங் எனும் இராணுவ வீரரின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது.
அன்வார் கான் எனும் நபர் பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் கடை வைத்திருப்பதாகவும் அவரே இப்படுகொலையை செய்திருப்பதாகவும், 1996ம் ஆண்டு இதே போன்று இந்திய இராணுவ கேப்டன் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் இந்நபரே காரணம் எனவும் இராணுவ புலனாய்வை மேற்கோள்காட்டி இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், அந்நபருக்கு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் கேல்னல் சித்திக் என்பவரினால் பணப்பரிசு கொடுக்கப்பட்டதாகவும், அத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஐ.எஸ்.ஐயை பின்னணியாக கொண்ட ஜிகாதி தீவிரவாத குழுவான லஷ்கர் மற்றும் ஜெயிஷ் இ மொஹ்மட் குழுவினருக்கும் தொடர்பிருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய - காஷ்மீர் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை தக்கவைத்திருக்க வேண்டும் என்பதனால் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment