Thursday, January 10, 2013

அமெரிக்கா, நட்பு நாடுகள் சிரியாவின் குழுவாத எழுச்சிக்கு இராணுவ ஆதரவு கொடுக்கின்றன. By Chris Marsden

பல மாதங்களுக்குப் பின் ஞாயிறன்று சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தன் முதல் பொதுமக்களுக்கான உரையை அளித்தார். மேற்கத்தைய சக்திகள் எதிர்த்தரப்பிற்கு ஆதரவு கொடுப்பது குறித்தும், எதிர்த்தரப்பு எவ்வாறு இஸ்லாமிய அடிப்படை வாத மேலாதிக்கத்தை கொண்டுள்ளது என்பது குறித்தும் அவர் குவிப்புக் காட்டினார். சிரியாவில், “எத்தகைய அரசியல் தீர்விற்கும் பிராந்திய சக்திகள் எதிர்த்தரப்பிற்கு நிதி அளித்தல், ஆயுதம் அளித்தல் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும், பயங்கரவாதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி தேவை, எல்லைகளை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் முக்கியம்” “மேற்கு சக்திகள் கைப்பாவையாக்கியுள்ள ஓர் அமைப்புடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்.” என்று அவர் கூறினார்.

“அல் குவேடாவின் சிந்தனைப் போக்கைப் பின்பற்றும் பயங்கரவாதிளுக்கு எதிராக முழு தேசிய அணிதிரள்வு வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.

எதிர்த்தரப்பின் குறுங்குழுவாத தன்மை மற்றும் அது அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை சௌதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கியுடன் இணைந்து ஆதரவை பெறுகிறது என்பது அசாத்தின் உள்நாட்டு ஆதரவிற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. அவருடைய மிருகத்தன ஆட்சியை எதிர்க்கும் பலர்—சுன்னிகள், அல்வைட்டுக்கள், கிறிஸ்துவர்கள் இன்னும் பிற சிறுபான்மையினர்—அவருக்கு அடுத்து வருவதைப் பற்றி கவலைப்பட்டு, அவருக்கு ஆதரவைக் கொடுக்கின்றனர்.

அசாத்தின் பேச்சுக்கு இரண்டு நாட்கள் முன்பு, அமெரிக்கத் துருப்புக்கள் சிரிய எல்லைக்கு அருகே இருக்கும் பாட்ரியட் ஏவுகணைப் பாதுகாப்புக் கலங்களை இயக்க துருக்கியில் இருந்து வரத் தொடங்கின. வெள்ளியன்று துருக்கியின் இன்சர்லிக் விமானத் தளத்திற்கு 27 பேர் பாட்ரியட் தயார்படுத்தல் நடத்த அனுப்பிவைக்கப்பட்டது, இது பறக்கக் கூடாது பகுதிகளை நிறுவுவதற்கான வான் தாக்குதலைத் தொடக்குவதற்கான முதல் தப்படி ஆகும்; இவ்வகையில்தான் லிபியாவில் கேர்னல் முயம்மர் கடாபியை பதவியில் இருந்து இறக்குவதற்கான போரின்போதும் நடைபெற்றது.

வெளிவிவகாரச் செயலகத்தின் செய்தித்தொடர்பாளர் Victoria Nuland 27 துருப்புக்கள் “தள அளவைக் குழுவினர்” என விவரித்தார். அடுத்த சில நாட்களில் அமெரிக்க ஒகலஹோமாவில் தளம் கொண்டிருக்கும் ஒரு வான் பாதுகாப்பு இராணுவ பிரிவுப் படையினரை அங்கு நிலைநிறுத்தும் என்று ஜேர்மனியில் Stuttgart ல் உள்ள ஐரோப்பிய அமெரிக்க கட்டளை அலுவலகம் (EUCOM) கூறியுள்ளது. அவர்கள் துருக்கிக்கு இராணுவ விமானத்தில் பறந்து வருவர், கூடுதல் உபகரணங்கள் கடல் மூலம் வரும்.

இதன் பின் 400 அமெரிக்கத் துருப்புக்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படுவது தொடரும்; அத்துடன் ஜேர்மனி, நெதர்லாந்தில் இருந்தும் துருப்புக்கள் வரும். ஜேர்மனிய, டச்சு பாட்ரியட் ஏவுகணைகள் இந்த வாரம் துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளன. மொத்தமாக கிட்டத்தட்ட 1,000 துருப்பினரும் ஆறு பாட்ரியட் ஏவுகணைக் கலங்களும் ஜனவரி இறுதிக்குள் செயற்பாட்டிற்கு தயாராக இருக்கும். இவை நேட்டோவின் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், ஏவுகணைகள் அந்தந்த நாடுகளால் இயக்கப்படும்.

இரண்டு பாட்ரியட் ஏவுகணைக் கலங்கள் திங்களன்று Vredepeel இராணுவ முகாமில் இருந்து Eemshaven துறைமுகத்திற்கு திங்களன்று அனுப்பி வைக்கப்படும். ஜனவரி 22 அன்று பொருத்தப்படுவதற்காக, நாளை 30 டச்சு மற்றும் 20 ஜேர்மனிய சிப்பாய்கள் ஏவுகணைகள் கப்பல் மூலம் வருவதற்கான தயாரிப்புக்களுக்குப் பொறுப்புக் கொண்டவர்கள், Eindhoven இல் இருந்து துருக்கிக்கு விமானம் மூலம் வருவர். இந்த ஏவுகணைகளை இயக்கும் 270 டச்சுத் துருப்புக்கள் ஜனவரி 21ம் திகதி துருக்கிக்கு புறப்படுவர். ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சரகம் செவ்வாயன்று Luebeck-Travemuende இல் இருந்து அனுப்பிவைக்கப்படும் பாட்ரியட் ஏவுகணைகள் துருக்கியத் துறைமுகமான Iskenderun க்கு ஜனவரி 21 அன்று வரும் எனத் தெரிவித்துள்ளது. ஜேர்மனியத் துருப்புக்கள் 350 ல் இருந்து 400 வரை இருக்கலாம்.

இந்நிலைப்பாட்டுடன் பிணைந்த வகையில், வடக்கு சிரியாவில் உள்ள Taftenaz விமானத் தளம் சிரிய எதிரத்தரப்புப் போராளிகளால் தொடர்ந்த தாக்குதலுக்கு இலக்கு கொள்ளப்பட்டுள்ளது; இதில் ஜபாட் அல்-நுஸ்ராவின் படைப்பிரிவு ஒன்றும் அடங்கும்; இது சமீபத்தில் வாஷிங்டனால் ஒரு பயங்கரவாத அமைப்பு எனக் குறிக்கப்பட்ட அல்குவேடாவுடன் இணைந்துள்ள அமைப்பு ஆகும். அரசாங்கப் படைகளிடம் இருந்து ஹெலிகாப்டர் விமானத் தளத்தை கைப்பற்றுவதின் மூலம், இவர்கள் சிரியாவின் பாதுகாப்புத் திறனை அப்பகுதியில் மூடிவிட இலக்கு கொண்டுள்ளனர்; அந்த பகுதியில் ஏவுகணைக் கலங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

இத்தகைய பன்னாட்டுத் துருப்புக்கள், ஏவுகணைகள் நிலைப்பாடு கொள்ளும் நேரத்தில், சிரியா “ஸ்கட் வகையிலான ஏவுகணைகளை” அதன் எதிர்ப்பாளர்களுக்குக் கடந்த மாதம் பயன்படுத்தியது என்று நேட்டோவிடம் இருந்து பலமுறை குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன; இவை அனைத்தும் மறுக்கப்பட்டு விட்டன. நேட்டோவின் பொதுச் செயலாளர் Anders Fogh Rasmussen இந்த ஏவுகணைகளின் பயன்பாடு, “வரவிருக்கும் சரிவு குறித்த ஆட்சியின் திகைப்புச் செயலாகும்” என்று கண்டனம் தெரிவித்தார். “இது நம் நட்பு நாடான துருக்கியின் திறமையான பாதுகாப்பிற்கு தேவையை அதிகரிக்கிறது.” என்றார்.

இதற்கிடையில் CIA, சிரியாவிடம் 1,000 டன்கள் இரசாயன ஆயுதக் கிடங்கு உள்ளது; அதில் நரம்பு குறித்த செயல்களைக் கொண்ட சரின், கடுகு வாயுவும் உள்ளன, இவை 50 சிறுநகரங்கள், நகரங்களில் சேமிக்கப்பட்டு வைத்துள்ளன என்று கூறுகிறது.

மோதலை விரிவாக்கும் வகையில் இஸ்ரேல் அதன் தயாரிப்புக்களையும் மேற்கொண்டுள்ளது; தன்னுடைய இராணுவ நிலைப்பாட்டை சிரியாவின் கோலான் குன்று பகுதியில் வலுப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் ஆயுதப் படைகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 56 கி.மீ. எல்லை வேலியை வலுப்படுத்தும் என்று இஸ்ரேல் வானொலி கூறியுள்ளது; மேலும் துருப்புகளுக்கான நிலவறைகள், விரைவில் எதிர்கொள்ளும் பிரிவுகள் மற்றும் புதிய எச்சரிக்கை முறை ஆகியவையும் புழக்கத்தில் வரும். நவம்பர் மாதம் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் சிரியா மீது ஒரு டாங்கு-எதிர்ப்பு ராக்கெட் குண்டுவீச்சை நடத்தின; இஸ்ரேலில் ஒரு எறிகுண்டு தற்செயலாக விழுந்ததை அடுத்து இது நிகழ்ந்தது.

பிரதம மந்திரி பென்ஞமின் நெத்தெனியாகு ஞாயிறன்று அமைச்சரவையிடம் சிரிய ஆட்சி “உறுதிகுலைந்து” உள்ளது என்றார். எல்லைகளில் இருந்து “சிரிய இராணுவம் நகர்ந்துவிட்டது, அந்த இடத்தில் உலக ஜிகத் சக்திகள் நுழைந்துவிட்டன.” என்றும் கூறினார்.

ஜனவரி 1ம் தேதி al-Quds al-Arabi இஸ்ரேலிய அதிகாரிகள் ஜோர்டானில் சிரிய எதிர்த்தரப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர், இது “கோலான் குன்றை பாதுகாக்க சிரியாவில் ஒருவேளை வரக்கூடிய கூட்டு இஸ்ரேலிய-அமெரிக்க செயற்பாட்டிற்கு” முன்னதாகவே நடந்துள்ளது என்று எழுதியுள்ளது. “இந்த அறிக்கை DEBKAfile என்னும் சிந்தனைக்குழுவால், இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டதால், பற்றி எடுக்கப்பட்டது; அது எழுதியது: “இச் செயலைப் பற்றி வேறு தகவல் ஏதும் இல்லை. இஸ்ரேலிய, ஜோர்டானிய எல்லைகள் சிரியாவுடன் இருப்பவற்றில் நடப்பவை உத்தியோகபூர்வமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. ஆனால் ஐரோப்பிய உளவுத் துறை ஆதாரங்கள் அமெரிக்க, ஜோர்டனிய, இஸ்ரேலிய சிறப்புப் படைகள், சிரிய எதிர்தரப்புப் படைகள் ஆகியவற்றிற்கும் சிரிய சிறப்புப் படைகளுக்கும் இடையே இரவுகளில் எல்லை மோதல்கள் உள்ளன என வெளிப்படுத்தியுள்ளன.”

லண்டனைத் தளம் கொண்ட Al-Hayat ம் ஞாயிறன்று ஐ.நா சிரியாவிற்கு ஒரு அமைதிகாக்கும் படையை அனுப்புவது குறித்த அதன் விருப்பங்களைச் சிந்திக்கிறது எனத் தகவல் கொடுத்துள்ளது; இது பாதுகாப்புக் குழு எடுக்கும் எந்த முடிவையும் விரைவில் செயல்படுத்தும்.

அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள், மற்றும் இஸ்ரேல் ஆகியவை தலையிடுவதற்கான தயாரிப்புக்கள் ஜனாதிபதி அல் அசாத் சுன்னி குழுவாத போக்குகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளார் என எதிர்ப்புக் காட்டும் எதிர்த்தரப்பு குறித்த பல அறிக்கைகளுக்கு நடுவே வந்துள்ளது. கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் ஷேக் அட்னன் ஆரௌரை மேற்கோளிட்டு, “ஒரு கடுமையான இன்னும் முற்பாக்குத்தன சலாபி, புரட்சிக்கு ஆசியளிக்கும் தந்தை போன்றவர் தன்னுடைய திட்டத்தை சௌதியத் தொலைக்காட்டியில் எழுச்சிக்கு ஆதரவு காட்டியுள்ளார், இன்னும் தூய இஸ்லாமிய வடிவமைப்பு தேவை எனப் பிரச்சாரம் செய்துள்ளார்.... அவருடைய செல்வாக்கின் பெரும் தரத்தை ஒட்டி அவர் சில இராணுவ கவுன்சில்களின் தலைமையில் சேர்க்கப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளது.

ஜபத் அல்-நுஸ்ராவின் “அராபிய சிற்றரசர்” அபு ஜூலபிப் ஆவார்; இவர் ஈராக்கில் உள்ள அல் குவேடா, அல் தவ்ஹித் வல்-ஜிகாத்தின் தலைவர் Abu Musab al-Zarqawi க்கு ஜோர்டானிய உறவினர் ஆவார்; அவர் அமெரிக்க வான் தாக்குதல் ஒன்றில் 2006ம் ஆண்டு இறந்துபோனார். இந்த வார இறுதியில், அசாத் ஆட்சி மகம்மது அல் ஜவஹிரியைச் சிறைபிடித்தது; அவர் அல் குவேடாவின் புதிய தலைவரான அய்மன் அல் ஜவஹிரியின் சகோதரர் ஆவார்; பிந்தைவயர் டேராவில் எதிர்த்தரப்புத் தீவிரவாதிகளுடன் பேச்சுக்களை நடத்துகிறார். ஜோர்டான் எல்லைக்கு அருகே இருக்கும் டேரா, ஜபத் அல் நுஸ்ராவின் வலுவான கோட்டை ஆகும்.

CBC உடைய மேரி ஈவ் பெடர்ட் அலெப்போவில் பல போராளிகளைப் பேட்டி கண்டார்; அவர்களுள் பெயரளவிற்கு சுதந்திர சிரிய இராணுவம் (FSA) என்பதின் தளபதி கேர்னல் அப்துல் ஜப்பர் அகைடியும் உள்ளார். ஆனால் இவர் அபு முகம்மதுர கடா இப் எசலாம் பிரிவுகளின் தலைவர். “FSA வெறும் காகிதக்கூட்டணிதான், இத்தோற்றம் அயல்நாட்டு அரசாங்கங்களுக்கு ஒரு ஒற்றுமையான முன்னணியைக் காட்டுவதற்கு தோற்றுவிக்கப்பட்டது” என்றார். பெரும்பாலான படைப்பிரிவுப் போராளிகள் அடிப்படை இஸ்லாமிய வாதிகள், ஜிஹத் மூலம் ஷாரியச் சட்டத்தை நிறுவ முற்படுகின்றனர்.

“மற்ற முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் போராளிகளையும் ஜபத் அல் நுஸ்ரா கொண்டுள்ளது; அதில் இருக்கும் பலர் மற்ற பூசல்களில் நல்ல அனுபவம் உடையவர்கள்” என்று பெடர்ட் கூறினார். “இக்குழு அலெப்போவின் மையப்பகுதியிலேயே, ஒரு மழலையர் பள்ளியாக இருந்த இடத்தில் நிலை கொண்டுள்ளது.”

அல்-மானிடரில் எழுதும் அலி ஹாஷெம் தலைநகர் டமாஸ்கஸில் அல்வைட்டுக்கள் “முற்றுகையில் உள்ளனர், FSA யினால் தலைநகரில் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர், அல்லது அவர்களுடைய கடலோர வலுவான இடங்களான Tortuous, Lattakiya விற்கு ஓடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

ஹஜர் அலஸ்வாட்டிற்கு அருகில் “அனைத்துச் சுவர்கள் மற்றும் கடைக் கதவுகளில் ஆட்சி எதிர்ப்புப் பிரச்சாரத் தகவல்கள் இருந்தன. ஒன்றில் “பஷர் வீழ்க” எனக் குறிக்கப்பட்டிருந்தது; மற்றொன்றில், “சுதந்திரம் வேண்டும், இல்லாவிடின் அலவைட்டுக்களை எரிப்போம்” என இருந்தது.

ஓர் உள்ளூர்வாசி கூறினார்: “சுருக்கமாகக் கூறுவோம். FSA என்பது சுன்னிக்களுடைய படை, நாங்கள் இனியும் அல்வைட்டுக்கள் எங்களை ஆள்வதை விரும்பவில்லை.”

இஸ்லாமியவாதத்தின் செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது வாஷிங்டன் இழிந்த முயற்சியாக ஜபத் அல் நுஸ்ராவை சிரியப் புரட்சிகர, எதிர்த்தரப்புச் சக்திகள், சிரிய தேசியக் குழு மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் தேசியக் கூட்டணி உடைய ஜிகதிஸ்ட் குழு என மறுத்திருப்பதில் இருந்து அறியப்படலாம்.


No comments:

Post a Comment