போட்டியால் பிரிவினையை உருவாக்க விருப்பமில்லை-ஜெப்ரி அழகரட்ணம்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிவிருந்த ஜனாதிபதி வழக்குரைஞர் ஜெப்ரி அழகரட்ணம் தான் இம்முறை போட்டியிடப்போவதில்லை அதிரடியாக தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் தான் போட்டியிடப்போவதில்லை என தற்போதைய தலைவர் விஜேதாஸ ராஜபக்ஷ அறிவித்ததை அடுத்து அப்பதவிக்கு தான் போட்டியிடுவேன் என ஜெப்ரி அழகரட்ணம் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது சட்டத்தரணிகள் சங்கத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளன இந்த சமயத்தல் நான் போட்டிபோட்டு மேலும் பிரிவு ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என அவர் குறிப்பிட்டா
இலங்கை வழக்குரைஞர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பதவி காலம் எதிர்வரும் பெப்ரவரியுடன் நிறைவடையுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment