ருஹுணு பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்
ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் ஹர்ஷ குணவர்தனவின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று இரவு 9.30 மணியளவில் கடைக்குச் சென்று வரும் போது மெதவத்த சந்தியில் வைத்தே அவர் மீது இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஹர்ஷ குணவர்தனவுக்கு பல எதிர்ப்புக்கள் இருந்ததாகவும், பல்கலைக்கழகத்தினுள் தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளும்படி பல முறை அவருக்கு அரச தரப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டிருந்ததாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்தார்.
கடந்த 29 ஆம் திகதி சுரஞ்சித் பண்டார என்ற மாணவன் தாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
-ஷான்-
0 comments :
Post a Comment