யாழ். கொடிகாமம் புத்தூர்ச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வீதித் திருத்தப் பணிகளில் பணியாற்றி வந்த நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்தில் மாத்தறை மாவட்டம், அக்குரஸ்ஸ பரஹவத்த பகுதியைச் சேர்ந்த வீவத்தாஹே நிஹால் (வயது 38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment