Saturday, January 5, 2013

ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவனாந்தராஜா தெரிவித்தார்.

ஜப்பான் அரசாங்கத்தின் 2.9 பில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் வேலைகளை முற்றாக முடித்து ஜப்பானிய நிறுவனம் நவம்பர் மாதம் வைத்திசாலை நிர்வாகத்திடம் கையளித்திருந்தது இக்கட்டிடத்தின் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் திறக்கப்பட இருப்பதாக குறிப்பிட்டார்.

இப்புதிய கட்டிடத்தொகுதியில் கதிர் இயக்கப் பிரிவு, ஈ.சி.ஜி, சத்திரசிகிச்சைக்கூடம் ஆகியன உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment