கடைசிப் பந்தில் மெக்லரன் சிக்ஸர் விளாச ஆறுதல் வெற்றியடைந்தது தென்னாபிரிக்கா
கடைசிப் பந்தில் மெக்லரன் சிக்ஸர் விளாச நியூஸ்லாந்து அணிக்கு எதிராக ஆறுதல் வெற்றியடைந்தது.தென்னாபிரிக்க அணி. தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போட்செஸ்ட்ரூம் மைதானத்தில் பகல்- இரவாக நேற்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது.
காலின் முன்ரோ 57 ரன்னும், எலியாட் 54 ரன்னும், பிராங்ளின் 53 ரன்னும் எடுத்தனர். மெக்லரன், சோட் சோபோ தலா 4 விக்கெட் எடுத்தனர். 261 ரன் இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்கா தொடக்கம் சிறப்பாக இருந்தது.
சீரான இடை வெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான சுமித் சிறப்பாக விளையாடி தனது 10-வது சதத்தை அடித்தார்.
ஸ்கோர் 229 ஆக இருந்தபோது (45.4 -வது ஓவர்) சுமித் 116 ரன்னில் 6-வது விக்கெட்டாக விழுந்தார். வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த போது தென்ஆப்பிரிக்காவின் 7-வது, 8-வது விக்கெட்டுகள் 47 மற்றும் 49-வது ஓவரில் விழுந்தன. ஆட்டத்தின் கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது.
கைவசம் 2 விக்கெட் இருந்தது. பிராங்ளின் வீசிய அந்த ஓவரில் முதல் 2 பந்தில் மெக்லரன் 3 ரன் எடுத்தார். 3-வது பந்தில் ஸ்டெய்ன் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தில் 2 ரன் எடுத்தார்.
இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன் தேவை. 5-வது பந்தில் ஸ்டெயின் ஆட்டம் இழந்தார்.
இதனால் கடைசி பந்தில் 3 ரன் தேவை. கைவசம் 1 விக்கெட் சோட்சோபே களம் வந்தார். மெக்லரன் கடைசி பந்தை எதிர்கொண்டார்.
அவர் சிக்சர் அடித்து தென்ஆப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார். தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. மெக்லரன் 24 பந்தில் 25 ரன் எடுத்தார். மில்ஸ், பிராங்ளின், மெக்கலசன், வில்லியம்சன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
தென்ஆப்பிரிக்காவுக்கு இந்த வெற்றி ஆறுதலானது. முதல் 2 போட்டியிலும் நியூசிலாந்து வென்று இருந்தது. அந்த அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொரை 2-1 என்ற கணக்கிலும் தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment