Thursday, January 10, 2013

ஷிராணிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு தமிழ் மக்களை காட்டி கொடுக்கும் உறுப்பினர்களின் அறிக்கை

தமிழ் தேசியம் பேசும் உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு தமது வாக்குகளை பயன்படுத்திய அப்பாவிப் பொதுமக்கள் ஒரு வேளை உணவிற்காக ஓலமிடும் நிலையில் மாளிகையில் வாழும் ஷிராணி பண்டாரநாயக்காவின் பதவியினைப் பாதுகாப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு கூட்டம் கூட்டி அறிக்கைகளை விடுகின்றனர்.

தமிழ் தேசியம் பேசும் உறுப்பினர்களது அறிக்கை

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்கும் என்று அக்கட்சியின் இணைச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்று நாளையும் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்பதுடன் பிரேரணைக்கு எதிராகவே தமது கட்சி வாக்களிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற கட்சிக்குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், மேற்படி விவாதத்துக்கு எதிராக இன்று(10.01.2013) முன்னெடுக்கப்படவுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்திலும் கூட்டமைப்பு பங்கேற்கும் என மாவை மேலும் கூறிப்பிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  January 10, 2013 at 3:50 PM  

Nothing to be achieved,but believing that they are gainining a kind of popularity among their fans

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com