புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸுக்கு பலத்த எதிர்ப்பைக் காட்டுகிறார் வாசு!
புதிய பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் மகிந்த ராஜபக்ஷவின் நம்பிக்கையாளருமான மொஹான் பீரிஸ் அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து, தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அவர் நீதியரசராக இருந்தவேளை அவருக்குப் பதவி நீடிப்பு வழங்க தான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அன்று அவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பதற்குக் காரணம், நீதியரசர் மொஹான் பீரிஸ் தன்னுடைய பதவியை சொந்தலாபத்துக்காகப் பயன்படுத்துவதாக தனக்குக் கிடைத்த தகவல்களே என்றும் அவர் குறிப்பிடுகிறார். தொடர்ந்தும் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது இவ்வாறிருக்க, பிரதம நீதியரசர் ஆசனத்தில் பிரதம நீதியரசர் அமர்ந்தபோதும் அவருக்கு எவரும் வரவேற்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment