Saturday, January 19, 2013

ஷிராணி விடயத்தை சர்வதேசம் எவ்வாறு கையாளும்?

கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க விடயத்தில் சர்வதேச சமூகம் கடும் அதிருப்திகளை வெளியிட்டு வரும் நிலையில், அமெரிக்க அரசின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளது.

இந்தப் பயணத்தின் போது இலங்கை நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான மோதல் மற்றும் பிரதம நீதியரசர் பதவிநீக்க விவகாரம் ஆகியவை குறித்து இலங்கையிடம் உரிய விளக்கங்களை இக்குழு கோரவுள்ளது என்று தெரியவருகிறது.

இவர்களின் விஜயம் பிரதம நீதியரசர் ஷிராணி பதவிநீக்கப்பட்ட விவகாரத்தை மையப்படுத்தி அமைந்திருந்தாலும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மாநாடு குறித்தும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலும் இலங்கைத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளனர் எனவும் தெரியவருகிறது.
-ஷான்-

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com