Thursday, January 31, 2013

துருவம் ஊடக வலையமைப்பு, சிம்ஸ் கெம்பஸ் நடாத்திய மாணவர்கள் , ஊடகத்துறையினருக்கான ஊடக செயலமர்வு (படங்கள்)

துருவம் ஊடக வலையமைப்பு, சிம்ஸ் கெம்பஸ் உடன் இணைந்து நடாத்திய அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான இருநாள் ஊடக செயலமர்வு அண்மையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இச்செயலமர்வில், மாணவர்கள் மற்றும் ஊடகத்துற ஆர்வலர்கள் உட்பட சுமார் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் பல்வேறு தலைப்புக்களில் தலைசிறந்த வளவாளர்களால் விரிவுரைகளும் பயிற்சிகளும் நடாத்தப்பட்டது. முதல்நாள் அமர்வில் நேர்காணல் என்ற தலைப்பில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எம். தாஜ், பத்திரிகை செய்திக் கட்டமைப்பு என்ற தலைப்பில் விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ், பத்தி எழுத்து என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸா, செய்தி, அறிவிப்புக்கலை நுணுக்கங்கள் என்ற தலைப்புக்களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சனுஸ் முஹம்மது பெறோஸ் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.

இரண்டாம் நாள் செயலமர்வில் சமூக வலையமைப்பும், ஊடகத் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் அன்வர் எம். முஸ்தபா, ஊடகத்தில் தமிழ்மொழி என்ற தலைப்பில் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் வீ.எஸ். இந்திரகுமார், அச்சு ஊடகத்துறையும் சட்டமும் என்ற தலைப்பில் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் அ.நிக்ஸன் மற்றும் ஊடக வரலாறும் ஊடக உளவியலும், அறிவிப்பும் விளம்பரமும் எனும் தலைப்புக்களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஒளிபரப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.

துருவம் ஊடக வலையமைப்பின் தலைவர் முஹம்மட் பிறவ்ஸ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், துருவம் ஊடக வலையமைப்பின் செயலாளர் எஸ். ஜனூஸ் நிகழ்வின் பதிவுகள் குறித்து உரையாற்றினார்.

துருவம் ஊடக வலையமைப்பின் ஆலோசகர்களான ஒரேஞ் டீ கம்பனியின் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ. நாஸர், கட்டிடக் கலைஞரும் அறன்கோ நிறுவனத்தின் பணிப்பாளருமான எம்.ரி.ஏ. ரஹீம், மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பரிசோதகர் ஏ.எல்.எம். பாறுக், பிரதம பொறியியலாளர் அல்ஹாஜ் தம்பிலெப்பை இஸ்மாயில் உட்பட அக்கரைப்பற்று கல்வி ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், கலைமகள் ஹிதாயா றிஸ்வி மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். அறிவிப்பாளர் ஏ.எல். நயீம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com