பிரதமர் பதவி தினேஷுக்கு......?
பிரதமர் தி.மு. ஜயரத்ன உடல் நலம் குன்றியிருப்பதனால் கவலைக்குரிய நிலையில் இருப்பதால், புதியதொரு பிரதமரை நியமிப்பதற்கான சிந்னையில் ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் என்போர் ஈடுபட்டுள்ளனர். புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினேஷ் குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவராக இருப்பதால்,அக்கட்சியைச் சேர்ந்த சிலர் இவ்விடயத்தில் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கின்றனர்.
இதனால், அமைச்சர் தினேஷ் குணவர்தன வெகுவிரைவில் தனது கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியைக் கலைத்து இலங்கை சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment