அமைச்சர் ரிசாத்திற்கு எதிரான நீதிபதிகள் குழுவில் இணைந்து கொள்ள மாட்டேன்- மொஹான் பீரிஸ்
மன்னார் நீதிவானைன அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிராக அமைச்சர் றிசாட் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக் குழுவில் நான் பங்குபற்றமாட்டேன் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். மன்னார் நீதவானை அச்சுறுத்தினார் என அமைச்சர் றிசாட் பதியுதீனிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக அமைச்சர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை குழுவிலேயே தான் பங்குபற்றமாட்டேன் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்ததுள்ளார்.
இந்த அறிவிப்பினால் நீதியரசர்களின் குழுவினை மாற்றி அமைப்பதற்காக எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி வரை வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை புதிய பிரதம நீதியரசரின் இந்த செயற்பாட்டிற்கு சட்டத்தரணிகள் சிலர் கண்டம் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment