யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் மினிபஸ்சும் விபத்து நால்வர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுவன் நோக்கிச் சென்ற மினிபஸ்சும், யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வந்து கொண்டிருந்த இராணுவ வாகனமும் மோதிக்கொண்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
ஊரெழுவிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிய இராணுவ வாகனம் பின்னர் மினிபஸ்சுடன் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்தவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment