Sunday, January 27, 2013

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்த்து முல்லைத்தீவு வரை நடைபவணி- மன்னாரில் இன்று ஆரம்பம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைகளைக் கண்டித்து போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் சார்பில் ஏற்பாட்ட நடைபவணி மன்னாரில் இருந்து இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை கடற்பகுதிக்குள்ளாக இந்திய மீனவர்கள் அத்துமீறில் நுழைவதால் எமது கடல்வளம் அழிக்கப்படுவதோடு இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் எனக் கோரியே இப்பவணி போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

நடைப்பவணி இன்று காலை 11.45 மணியளவில் முள்ளிக்குளம் கடற்கரையில் ஆரம்பமானது.
மன்னார், முள்ளிக்குளத்தில் இன்று ஆரம்பமான குறித்த பேரணி முல்லைத்தீவு வரை இடம்பெறும் என அவ்வமைப்பின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com