பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்ற மாட்டோம்!
இந்த வருட இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டு அமர்வில் பங்கேற்பதுதில்லை என கனடா இன்று அறிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை மனித உரிமைகளின் மேம்பாடு தொடர்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று கனடா அறிவித்துள்ளது.
இது இப்படி இருக்க இந்த மாநாட்டில் அவுஸ்திரேலியா பங்கு கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் பொப் கார் இலங்கைக்கு வந்திருந்த போது தெரிவித்திருந்ததுடன் இதனை கொழும்பின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி அவுஸ்திரேலியா இந்த மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 comments :
It is not a matter at all.Srilanka has it's talents,as we do respect our motherland and have a strong belief of our country,which can and will prosper at any circumstances.
God bless Srilanka for ever.
Post a Comment