அதிகாரிகள் மதுபோதையில்! தப்பிச் சென்றனர் சிறைக்கைதிகள்!
அவிசாவளை நீதிமன்ற சிறைச்சாலையிலிருந்து கதவுகளை உடைத்துக் கொண்டு, சிறைக்கைதிகள் பத்துப் பேர் தப்பிச்சென்ற வேளை, அங்கு காவலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் மதுபோதையில் இருந்ததாக சிறைச்சாலையை அண்மித்த செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன. நேற்று (11) ஆம் திகதி இந்த விடயம் தொடர்பான முழுமையான அறிக்கை தமக்குக் கிடைக்கவிருந்ததாகவும் இதுபற்றி விசாரித்தபோது சிறைச்சாலை ஆணையாளர் பீ. டப்ளியூ. கொடிப்பிலி குறிப்பிடுகிறார்.
அந்த அறிக்கைக்கேற்ப மேலதிக நடவடிக்கைகளைத் தாம் எடுக்கவுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment