முன்னாள் புலிகளுக்கு உதவி செய்ய யாழ்.மாவட்ட செயலகத்தில் அலுவலகம் திறப்பு- படங்கள் இணைப்பு
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக யாழப்பாணத்தில் இணைப்பு காரியலயம் ஒன்று நேற்று திறந்து வைக்க்பபட்டுள்ளது. யாழ்.மாவட்டச் செயலகத்தில் செயற்படும் இக்காரியாலயத்தை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கே.சி ஜெகத்குமார பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு அமைச்சின் அதிகாரிகள் உளிட்ட பலர் கலந்து கொண்டனர். புனர்வாழ்வு பெற்று வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவி செய்வதே இந்த அலுவலகத்தின் நோக்கமாகும்
.
0 comments :
Post a Comment