Friday, January 18, 2013

இஸட் புள்ளிக்கென பேராசிரியர்கள் மூவர் நியமனம்

2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப்பரீட்சையின் இசட் புள்ளிகளை கணிக்கும் பொருட்டு, தகவல் தொழிநுட்பத்தில் பாண்டித்தியம்மிக்க பேராசியர்கள் மூவரை நியமித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவு செய்யப்பட பேராசிரியர்கள் மூவரே இதற்கென நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினிப் பாடசாலையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிட தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment