ரிஎம்விபி உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு.
ஏறாவூர் பிரதேச சபை ரிஎம்விபி என அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படுகின்றது. குறித்த சபையின் தலைவராக வினோத் என்பவர் உள்ளார். பிரதேச சபைத் தலைவர் பல்வேறு வகையான ஊழல்களை மேற்கொண்டுள்ளதாக சபையின் எதிர்கட்சியில் உள்ள முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த சித்திக் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தினை சமர்பித்துள்ளார்.
தனது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கைநெற்றுக்கு சித்தீக் தெரிவிக்கையில் : ' பிரதேச சபைத் தலைவர் எதேச்சையாக செயற்படுகின்றார், பதுளை வீதியில் பிரதேச சபைக்கு சொந்தமான இரும்பு கொங்கறீட் கம்பிகளை விற்று தனது பையில் போட்டுக்கொண்டுள்ளார், மேலும் வெள்ள காலத்தில் கடலில் மிதந்து வந்த விலைமதிப்பு மிக்க மரமொன்று பிரதேச சபையினால் கைப்பற்றப்பட்டு சபை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அதனை ஏலத்தில் விற்று சபையின் வரவிற்கு அப்பணத்தை எடுப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தலைவர் மரத்தை எவ்வித கலந்தாலோசனையும் இன்றி விற்று அப்பணத்தையும் பையில் போட்டுக்கொண்டுள்ளார்' எனவே இந்நிலைமை தொடர்வதை அனுமதிக்க முடியாது என்ற அவர் தான் சபைத் தலைவருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ஆழும்தரப்பைச் சேர்ந்த மூவர் வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தனது நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் இன்று விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் தனக்கு ஆதரவாக வாக்களிக்கவிருந்த ஆழும்தரப்பு உறுப்பினர் ஒருவரை பஜரோ வண்டியொன்றில் வந்த பிள்ளையானின் ஆட்கள்; ஏற்றிச் சென்றுவிட்டதாகவும், அதனால் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார் பிரதேச சபை உறுப்பினர் சித்தீக்.
சபையின் பிரதித் தலைவரான தம்பிராசா, கணேஷமூர்த்தி, வியாயகமூர்த்தி ஆகியோரே தனது நம்பிக்கையில் பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ள ஆழும்கட்சி உறுப்பினர்கள எனவும் சித்திக் கூறுகின்றார்.
ஏறாவூர் பிரதேச சபை 14 உறுப்பினர்களை கொண்டது. இதில் ஆழும்தரப்பில் 10 பேர் எதிர்தரப்பு 4 பேர். ஆழும்தரப்பைச் சேர்ந்த 4 பேர் சபை ஒன்றுகூடல்களுக்கு தொடர்சியாக சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தினால் சபையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் இடத்திற்கு இதுவரை உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் 10 உறுப்பினர்களுடன் இயங்கும் சபையில் எதிர்கட்சி 4 உறுப்பினர்கள், ஆழும்கட்சி 3 உறுப்பினர்கள் மொத்தம் 7 பேர் சபைத்தலைவருக்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment