கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள மேம்பாலத்தடியில் மொனராகலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது ஆண் நண்பர் விஷம் அருந்திய நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் பேச்சாளர் தெரிவித்தார்.
புறக்கோட்டை பொலிஸாரின் விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்.
இப்பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தரான இவரது ஆண் நண்பர்.
இச்சம்பவத்தின் பின்னர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment