வயலில் வேலை செய்த மூன்று தமிழ் பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற காடையர்கள்.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வட்டமடு பிரதேசத்தில் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நான்கு காடையர்கள் அவர்களைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர் இதன்போது காடையர்களிடமிருந்து தப்பி காயங்களுடன் குறித்த பெண்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வயலில் இருந்த பெண்களிடம் பலாத்கார முயற்சி மேற்கொண்டபோது பெண்களும் கூக்குரலிடவே பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். இதன்போது குறித்த காடையர்கள் ஒடி ஒளிந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட மூன்று பெண்களும் தப்பியோடி நகருக்குள் வந்துள்ளனர்.
இருப்பினும்காடையர்களுடன் போராடியதால் காயமுற்ற நிலையில் முதலில் திருக்கோவில் வைத்தியசாலையில் மூவரும் அனுமதிக்கப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
0 comments :
Post a Comment