Tuesday, January 15, 2013

நான் குற்றவாளியே அல்ல! என்கிறார் முன்னாள் நீதியரசர்

மக்களிடத்தில் வருவேன் : காலதாமதமின்றி அறிக்கை விடுவேன்

‘30 ஆண்டுகள் நேர்மையான முறையில் எனது கடமையைச் செய்துவந்தேன், தொடர்ந்தும் மக்களோடு இருப்பேன்’ இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா விஜேராம மாவத்தையிலுள்ள தனது வாசஸ்தலத்திலிருந்து பதவி விலகிச் செல்லும்போது ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.

பிற்பகல் 5.30 மணிக்கு வாசஸ்தலத்திலிருந்து வெளியே வரும்போது, நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களும், பெருந்தொகையான மக்களுக்கும் முன்னாள் பிரதம நீதியரசரைச் சூழ்ந்து கொண்டனர்.

சிவப்பு நிறத்தினாலான காரை அவரது மகன் ஓட்டிச்சென்றார். அவரது கணவனார் பிரதீப் காரியவசம் இன்னொரு காரில் இருந்தார். பொலிஸார் ஊடகவியலாளரிடமிருந்து அவரை விடுவிப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்தனர். ‘வேகமாக இடத்தை விட்டுச் செல்லுங்கள்’ என்று பொலிஸார் சிராணி பண்டாரநாயக்கவுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கட்டளையிட, ஊடகவியலாளர்களும், புகைப்படப்பிடிப்பாளர்களும் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு முன்னே செல்ல, சிராணி பண்டாரநாயக்க காரின் காதவை மெல்லக் கீழிறக்கினார்.

முகத்தில் பெரும் சந்தோசத்துடன் இப்படிச் சொன்னார்.

‘நான் நேர்மையானவர். வரி இல்லாமல் ஒரு வாகன அனுமதிப்பத்திரம் கூட வாங்கவில்லை. நான் குற்றவாளியல்ல. நான் எப்போதும் மக்களுடன் இருப்பேன். பொதுமக்கள் எனது குடும்பத்தைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நான் முகங்கொடுத்த பிரச்சினைக்கான அறிக்கையை வெகுவிரைவில் வெளியிடுவேன்.’

இவை தவிர அவர் இன்னும் பலவிடயங்களைச் சொன்னபோதும் பொலிஸாரின் அதட்டலுடன் கூடிய பெருஞ் சத்தத்தினால் அவை விளங்கவில்லை. ஊடகவியலாளர்களில் ஒருவரின் கால் கூட அங்கிருந்து பயணித்த வாகனமொன்றுக்கு சிறிது அகப்பட்டுக் கொண்டது.

(கலைமகன் பைரூஸ்)

1 comments :

Anonymous ,  January 15, 2013 at 4:24 PM  

However she was our most repected CJ
Our regards and salutes to the outgoing first great woman CJ

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com