வடமராட்சி கடலில் தொழிலுக்கு சென்ற ஆறு படகுகளைக் காணவில்லை- மீனவர்களும் மாயம்
யாழ் வடமராட்சிப் கடலுக்குள்ள தொழிலுக்காகச் சென்ற ஆறு படகுகளுக்கும் மீனவர்களுக்கும் இன்னமும் என்ன? நடந்தொன்று தெரியாதுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க சமாசனங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். மேலும் யாழ். வல்வெட்டித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவரும் நேற்று காணமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கடல்தொழிலுக்குச் சென்ற ஆறு படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மயிலிட்டித்துறையில் இருந்து 4 படகுகளும், பொலிகண்டித் துறையில் இருந்து சென்ற இரண்டு படகுகளுமே இவ்வாறு கரை திரும்பவில்லை என எமது சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த இரு மீனவர்களும் வல்வெட்டித்துறைக் கடலில் காணாமல் போயுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க சமாசனங்களின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment