பிரான்சின் லியோனில் உள்ள மிருககாட்சி சாலையில் உள்ள இரண்டு குட்டியானைகள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட யானைகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரபல நடிகை பிரிஜிட் பார்டோட், பிரான்ஸ் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த நோய் பரவலைத் தொடர்ந்து மற்ற விலங்குகளுக்கும், மிருககாட்சி சாலைகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகத் தெரிவித்து இந்த குட்டியானைகளை கொன்றுவிட முடிவு செய்துள்ளனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல நடிகை பிரிஜிட் பார்டோட் கூறுகையில், சமீபகாலமாக பிரான்ஸ் விலங்குகளின் கல்லறையாக மாறிவருகிறது.
இதனால் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறேன். யானைகளை கொலை செய்தால் ரஷ்ய குடியுரிமை பெற்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்
.
No comments:
Post a Comment