வெளிநாட்டு பிரஜைகளின் வங்கி கணக்குகளில் ஊடுருவி மோசடி செய்த கும்பல் ஒன்று மாட்டியது!
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெளிநாட்டு பிரஜைகளின் வங்கிக்கணக்குகளின் தரவுகளை திரட்டி, போலி கடனட்டைகளை தயாரித்து அதனுடாக வங்கிகளிலிருந்து கோடிக்கணக்கான நிதியை கையாடிய, இரண்டு அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் 12 பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட பணம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும், சொந்த தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக, பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டது. இதுவரை சந்தேக நபர்கள் பலர், கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமான நிதியை, இவர்கள் கையாடியுள்ளதாக, விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
மேலும், இவ்வாறு கையாளப்பட்ட நிதியில் ஒரு பகுதி சமூக சேவைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளின்போது வெளிவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment