வல்வெட்டித்துறையாருக்கு இளைஞன் ஒருவன் கொடுத்த ஓலையில் திணறுகின்றது வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம்.
வல்வெட்டித்துறையில் பிறந்தவர் மலையாளியான திருவேங்கடம் வேலுபிள்ளையின் பொடி பிரபாகரன். உலகத் தமிழருக்கு ஒலை கொடுத்து தேசியத் தலைவரானார். ஆனால் அதே வல்வெட்டித்துறையில் பிறந்த இளைஞன் ஒருவன் வல்வட்டித்துறையாருக்கு ஒலை கொடுத்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தை திணர வைத்துள்ளார்.
குறித்த இளைஞன் வல்வெட்டித்துறையாரிடம் சுமார் 30 கோடி ரூபாய்களை ஏப்பம் விட்டுள்ளார். இளைஞன் பெரிய றிஸ்க் ஒன்றும் எடுக்கவில்லை. கையெழுத்து போட்டு கடிதம் கொடுக்கவில்லை. 'தரலாம் தாருங்கள்' என்றே தொகை தொகையாக வாங்கியுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள எண்ணிக்கை தெரியாத பலரிடமும் லட்சங்களை கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஒருவரிடமும் 5 லட்சத்திற்கு குறைந்த பணத்தினை வாங்கவில்லை.
வல்வெட்டித்துறைக்கு பொலிஸ் நிலையத்திற்கு நாளாந்தம் தற்போது ஐவர் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் பொலிஸாரால் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியவில்லை. காரணம் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு பிரதேச பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு அதிகாரம் கிடையாது. ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மோசடிகள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் அல்லது மோசடி தடுப்பு பிரிவு பொலிசாரல் விசாரிக்கப்படவேண்டும் என்பது பொலிஸ் சட்ட திட்டங்கள்.
எது எவ்வாறாயினும் குறித்த இளைஞனை அழைந்த பொலிஸார் முறைப்பாடுகள் தொடர்பில் வினவியுள்ளனர். 'வாங்கியிருக்கின்றேன் கொடுப்பேன்' என்கிறாராம் இளைஞன்.
இதனடிப்படையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது கடன் கொடுத்தோரின் முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றது.
ஒட்டு மொத்த ஊரவரும் இளைஞனை எவ்வாறு நம்பினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இளைஞன் கில்லாடி. இதுவரை ஒருவரிடம் கடன் வாங்கியது மற்றவருக்கு தெரியவராமல் பாதுகாத்து வந்திருக்கின்றார்.
கடன் கொடுத்தவர்கள் கடன் கொடுத்த கதையை மற்றவரிடம் சொல்லாமல் இருப்பதற்கு இளைஞன் கொடுத்த குளிசை என்னவாக இருக்கும்?
1 comments :
தமிழருக்கு ஓலை கொடுக்கும் கெட்டித்தனம் வல்வெட்டிதுறை ஆட்களுக்கு கைவந்தகலை.
ஆதிகாலம் தொடங்கி இந்தியர்களையே ஏமாற்றி கள்ளகடத்தல் வியாபாரம் செய்யும் மண்ணில் பிறந்தவர்களுக்கு எம்மவர்களை ஓலை கொடுத்து மடக்குவது பெரிய விடயம் அல்ல.
Post a Comment